அனோஜன் மீதான தாக்குதல் மற்றும் சட்ட நிலைமை – வெளியுறவு அமைச்சர் விளக்கம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தமாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தங்கியிருந்த சிறைச்சாலைக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகள் இருமுறை சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்துள்ளதுடன், அவர் மீதான தாக்குதல் குறித்துப் பரவிய தகவல்கள் தொடர்பாகச் சிறைச்சாலை அதிகாரி மற்றும் வைத்தியரைச் சந்தித்து அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர். 

சிறையிலிருந்த மற்றொரு கைதியுடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் முற்றியதே இந்த மோதலுக்குக் காரணம் என்றும், மருத்துவப் பரிசோதனைகளின்படி அவரது முகத்தில் மற்றைய கைதியின் நகக் கீறல்களும் லேசான காயங்களும் மட்டுமே காணப்படுவதாகவும், தாக்குதலில் எந்தவிதமான ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றும் சிறைச்சாலை வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிவராசா அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07/10) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர், அனோஜனின் உயிருக்குத் தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர் சிறைச்சாலையின் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதைச் சிறை அதிகாரிகள் தூதரகத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

சவுதி சட்டக் கட்டமைப்புக்கு அமைவாக, சிவராசா அனோஜனுக்கு தேவையான சட்ட நிவாரணங்களைப் பெற்றுத்தர அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

அமைச்சர் குறிப்பிட்டபடி, அனோஜனின் வழக்கு தற்போது சவுதி அரேபிய நீதிமன்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேன்முறையீட்டு நீதிமன்றம் 2026 செப்டம்பர் 17 அன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், சவுதி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக, இலங்கைச் சட்ட வல்லுநர்கள் குழு மற்றும் சவுதி சட்ட ஆலோசகர்களின் ஒத்துழைப்புடன், அரசின் நேரடித் தலையீட்டின் கீழ் இதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Share this Article
Leave a comment