அனலைதீவுக்கு விரைவில் இலங்கை வங்கியின் சேவை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அனலைதீவில் நிலவும் வங்கி சேவைகள் பற்றாக்குறை தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சமீபத்தில் தனது அனலைதீவுக்கான கண்காணிப்பு விஜயத்தின் போது பிரதேச மக்களுடன் நேரடியாக கலந்துரையாடினார்.

பிரதேச மக்கள், வங்கிப் பயன்பாடு இல்லாமையின் காரணமாக தங்களுக்கு ஏற்படும் பொருளாதார சிரமங்களை வெளிப்படுத்தியதுடன், இதற்கான துரிததீர்வை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை வங்கியின் வடபிராந்திய அதிகாரியுடன் உரையாடி, அனலைதீவில் வங்கிச் சேவைகளை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டியது தொடர்பில் உத்தரவாதத்தை பெற்றார். இதன்அடிப்படையில், குறுகிய காலத்திற்குள் BOC Connect இயந்திரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந் முயற்சியின் மூலம், அனலைதீவு மக்கள் வங்கி சேவைகளின் வாயிலாக பொருளாதார முறையில் முன்னேற்றம் காண்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். இது, அவர்கள் எதிர்கொண்டு வந்த சிரமங்களை நீக்குவதுடன், சமூக அபிவிருத்திக்கும்உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article