அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியை மீட்ட பொலிசார்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை (ஜூன் 16) அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிசார் குறித்த பெட்டியை மீட்டுள்ளனர்.

குறித்த பெட்டியினுள் தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article