அனலைதீவில் நாளை கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் இடம்பெறும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
அனலைதீவு மக்களுக்கான கொரொனா தடுப்பு மருந்து நாளை காலை (01.06.2021) 7.00 மணி தொடக்கம் அனலைதீவு வைத்தியசாலையில் வைத்து செலுத்தப்படவுள்ளது.
அதீத ஒவ்வாமை உள்ளவர்கள், கற்பிணித் தாய்மார், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தவிர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.
நாளைய தினம் மட்டுமே இம்மருந்து செலுத்தப்படும் என்பதால், மக்கள் இச்சந்தர்ப்பத்தை தவறவிடாது கொரொனா தடுப்பு மருந்தைப்பெற்றுக்கொண்டு கொடிய தொற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Share this Article