அநுராதபுர கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு
அநுராதபுர காலத்தின் இறுதி மன்னனான உதயவின் ஆட்சியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு கல்வெட்டு (செல்லிபி) முல்லைத்தீவில் உள்ள வனப்பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை தொல்பொருள் துறையின் வவுனியா அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட 78 ஏக்கர் பரப்பை கொண்ட நாகச்சோலை வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சியின் போது கோயில் ஒன்றின் இடிபாடுகளில் இருந்து கண்டறியப்பட்ட பிற தொல்பொருள் கலைப்பொருட்களில் இந்த கல்வெட்டும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்களில் கபோக்கல், கற்சுவர்கள், கல்வெட்டுகள் மற்றும் நிலவுக் கற்கள் கொண்ட கல் தூண்கள் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு ஸ்தூபியின் எச்சங்கள் இருந்துள்ளன.
87 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
உள்நாட்டுப் போர் மற்றும் புதையல் தோண்டுவோரின் நடவடிக்கைகள் காரணமாக இந்த இடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இடத்தில் தொடர்ந்தும் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.