அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 2 கிலோகிராம் 325 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் எந்தேரமுல்ல பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வத்தளை, எந்தேரமுல்ல, சன்பிளவர் கார்டன்ஸ் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடையவர் என்பதுடன், அவரிடமிருந்து 2 கிலோகிராம் 325 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமாக கருதப்படும் “புளுமெண்டல் ரவி”யின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக எந்தேரமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article