யாழ்ப்பாணம் நகரில் புதிய சந்தைப் பகுதியில் இன்று பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண மாநகரின் பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசு கடை சந்தி வரையான கே.கே.எஸ் வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான இருமருங்கு கடைகளும், முனிஸ்வரன் வீதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், கஸ்தூர்pயார் வீதி மற்றும் பழைய தபலாக வீதியில் உள்ள இரு மருங்கு கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் பணி புரிவோர் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே வர்த்தக நிலையங்களை திறக்கலாம் என அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று யாழ்ப்பாணம் புதிய சந்தைப் பகுதியில் 03 இடங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் இடங்களில் மக்கள் கொரோனா பாதுகாப்பற்ற நிலையில் சமுக இடைவெளிகள் பேணப்படாத நிலையில் குவிந்துள்ளனர் இதனால் கொரோனா பரவும் அபாயம் அதிகதித்த நிலையே காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.