நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் தற்போது எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும், தடையின்றி விநியோகிப்பதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு ஏற்கனவே ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தேவையற்ற எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
எரிபொருளுக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளியேறுவதைத் தடுப்பதற்கு இந்த முறையானது ஒரு கட்டுப்பாட்டை வழங்குகிறது என அவர் தெளிவுபடுத்தினார்.