கிராம உத்தியோகத்தர் சேவைக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 58 பேர் தெரிவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு 2025(2026) செய்வதற்கான எழுத்துப் போட்டிப் பரீட்சை மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரிவினால் நடத்தப்பட்ட தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், காலாண்டுப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட தகுதிபெற்றோரின் பெயர்ப் பட்டியல் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

யாழ்ப்பாண மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் மொத்தம் 58 விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் சங்கானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் மற்றும் வேலணை பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தலா 5 பேரும், கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தலா 6 பேரும், மருதங்கேணி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தலா 4 பேரும், கோப்பாய், நல்லூர் மற்றும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தலா 3 பேரும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 2 பேரும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து ஒருவருமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கான கிராம உத்தியோகத்தர் பயிற்சி நியமனக் கடிதங்கள் 2026.10.08 ஆம் திகதி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ள விழாவில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுசெய்யப்பட்ட பயிற்சி நியமனதாரர்களுக்கான மூன்று மாத காலாண்டுப் பயிற்சியானது 2026.10.12 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளர் (உள்நாட்டு அலுவல்கள்) திருமதி ஓமாலி விமலரத்ன அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment