இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அதிமேதகு அகியோ இசொமாட்டா அவர்கள், தமது தூதுக்குழுவினருடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்
யாழ்ப்பாணத்தின் விமானப் போக்குவரத்து, சுற்றுலா, பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேசத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதில் இவ்வாறான இராஜதந்திரத் தொடர்புகளும் ஒத்துழைப்புகளும் முக்கியமானவை.
இவ்வருகையின் ஊடாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெற்று, வடக்கின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது