அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவர்கள் மீது தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அச்சுவேலி பகுதியில் இயங்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இடம்பெற்றதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தாக்குதல் காட்சிகள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

குறித்த சீர்திருத்தப் பள்ளியில் உள்ள மாணவர்களை, மற்றொரு குழுவைச் சேர்ந்த மாணவர்கள் கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இது குறித்து கவனம் செலுத்திய மனித உரிமைகள் ஆணைக்குழு, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share this Article
Leave a comment