சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதோச நிறுவன கிளைகளிலும் 6 அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

.இந்த விலை குறைப்பு நேற்று முதல் (26/09) நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 309 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு கிலோகிராம் வெள்ளை சர்க்கரையின் விலை ரூ. 4 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 245 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை ரூ. 2 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 242 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 5 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 174 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சதோச தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி விலை ரூ. 5 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 173 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும், குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை வாங்கலாம் என்று லங்கா சதோச நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article
Leave a comment