சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (27/09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 14,000 சிகரெட்டுகள் அடங்கிய 70 கார்ட்டன்களும், 18,000 சிகரெட்டுகள் அடங்கிய 90 கார்ட்டன்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 56 வயதுடைய சீனப் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்