முல்லையில் புதிய அஞ்சல் அலுவலக கட்டடம் திறந்து வைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டடம் இன்று (18/09) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது  அஞ்சல் அலுவலகத்தின் பெயர்ப்பலகை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், புதிய கட்டடமும் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய அஞ்சல் அலுவலக கட்டடத்தில் மக்களுக்கான அஞ்சல் சேவைகளையும் அமைச்சர் ஆரம்பித்து வைத்தார். 

மேலும் இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பர்களான துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வடமாகாண அஞ்சல்மா அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தார்கள்.

Share this Article
Leave a comment