கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இலவச செயற்கை முறை கருக்கட்டல் சேவை அறிமுகம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றிலேயே முதற்தடவையாகக் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக ‘செயற்கை முறை கருக்கட்டல்’ சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சேவையின் முன்னேற்றம் குறித்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25/06)  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆய்வு கூட்டம் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

இலங்கையிலேயே முதல் தடவையாக அரச மருத்துவமனையொன்றில் செயற்கை முறைகருக்கட்டல் சேவையை முழுமையாக இலவசமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையானது எமது பிரதேசத்துக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகின்றது. எமது மக்களில் பலரும் பல இலட்சம் ரூபாய்களைச் செலவு செய்து வெளிநாடுகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ தான் இந்தச்சி கிச்சையை மேற்கொள்கின்றனர். இதனால் வறிய மக்களுக்கு இவ்வாறானதொரு வாய்ப்பு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. தற்போது அவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் வகையில் இந்தச் சேவையானது, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையின் பெண்கள் பராமரிப்புக்கான சிறப்பு மையத்தில் பேராசிரியர் எஸ்.ரகுராமன் வழிகாட்டலில் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ரகுராமன் மற்றும் மருத்துவமனைப் பணிப்பாளர் உள்ளிட்ட முழு மருத்துவக் குழு வினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட ஆளுநர், ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சிறப்பான பயணத்தை எவ்வித இடையூறுகளுமின்றித் தொடர்ந்து வெற்றி கரமாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்



Share this Article
Leave a comment