சரித் அபேசிங்கவை நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், அவர் இதுவரை வகித்த அனைத்து பதவிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தவும் கட்சி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,

2023 ஆம் ஆண்டளவில் அவர் கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ செயற்படவில்லை என்றும், சரித் அபேசிங்க அக்காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படுவதையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எதிர்ப்பதில்லை என்பதை பொதுச் செயலாளர் தனது அறிக்கையின் ஊடாக மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share this Article
Leave a comment