மன்னார் மாவட்டத்தின் யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று (10.06) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

மன்னார் மறைமாவட்ட ஆயர் தற்பொழுது வெளிநாடு சென்றுள்ளமையால் இச்கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்து நேசன் அடிகளார் ஆயரின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் பல்வேறுபட்ட திணைக்களத் தலைவர்கள் , மடுத் திருப்பதி பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மடுத் திருப்பதியின் வருடாந்த ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு நடைபெற வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதில் சுகாதாரம்- போக்குவரத்து- பாதுகாப்பு- குடிநீர்- உணவு விடயங்கள்- மின்சார வசதி ஆகியன பற்றி முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
மருதமடு ஆலய ஆடி மாத பெருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் மாதம் ஆடி 2ஆம் திகதி (02.07) பெருவிழா இடம்பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.