இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிவுல் ஓயா” செயற்திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்குநிலையிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், அரசியற் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் கருத்தமர்வு இன்று (15/02) இடம்பெற்றது.

இதன்போது “கிவுல் ஓயா” செயற்திட்டத்தின் பின்னணி, இதன் தாக்கம், இது தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றிருந்தன.
நிகழ்வில் வளவாளராக ஊடகத்துறை விரிவுரையாளர் ச.நிக்சன் கலந்துகொண்டு விளக்கங்களை வழங்கியிருந்தார்.
“கிவுல் ஓயா” செயற்திட்டத்திற்கு வடக்கு கிழக்கில் சமூகம் சார்ந்து இயங்கிவரும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் பல்வேறுபட்ட கருத்துக்களும், எதிர்ப்புகளும், விமர்சனங்களும் போராட்டங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.