120 பயனாளிகளுக்கு மூன்று ஆடுகள் வீதம் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட 05 பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் பின் தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மூன்று ஆடுகள் வீதம் ரூபா 75,000 பெறுமதியான ஆடுகள் 120 பயனாளிகளுக்கு கடந்த 29 ஆம் திகதி வழங்கப்பட்டது.

பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் உட்பட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், விவசாய பணிப்பாளர், பயனாளிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article