முல்லைத்தீவில் ஓவியப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் 2022,2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கருத்தியல் ஓவியப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வெற்றியாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (டிசம்பர் 29) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.குணபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.

குறித்த நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகள், அதிதிகளின் சிறப்புரைகள் என்பவற்றுடன் ஓவியப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article