கிளிநொச்சியில் பெரும்தொகை கஞ்சா மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி வீடொன்றை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பெரும்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு, விசேட போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தினை அமுல்படுத்த பணிப்புரை விடுக்கப்பட்டது.

அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக கடந்த 18 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரதிபுரம் பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதல் மேற்கொண்டது. இதன் போது கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

Share this Article