முல்லைத்தீவில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!- தத்தளித்த மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிரம்பியுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள புளியங்குளம் என்ற சிறிய குளம் பகுதியளவில் உடைப்பெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள கருவேலங்கண்டல் கிராமத்தில் 31 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன் இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர் இவர்களை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம இளைஞர்கள் இராணுவத்தினர் இணைந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Share this Article