மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகினர்.

பளை புலோப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை மதியம் இந்த விபத்து இடம்பெற்றது. இதில், பளை நகரப் பகுதியை சேர்ந்த குணம் கணேசன் (வயது – 20) என்பவரே உயிரிழந்தார்.

பளை நகரப் பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின.

இதில், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் பளை பிரதேச மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டனர்.

Share this Article