கிளிநொச்சியில் பெய்துவரும் கனமழையால் 51 குடும்பங்கள் பாதிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் நேற்று (நவம்பர் 15) நண்பகல் 12.00 மணிக்கு பெறப்பட்ட புள்ளி விபரத்தகவல்களில் குறித்த விடயம் பதிவாகியுள்ளது.

மேலும், இவர்களில் பத்து குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் உறவினர் வீடுகளில் இடம்பெயர்ந்துள்ளதுடன், ஐந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்தோடு சீரற்ற காலநிலையினால் வட்டக்கச்சி பகுதியில் கால்வாயுடனான மதகு ஒன்றும் சேதமடைந்துள்து.

குறித்த பாதிப்புக்கள் தொடர்பாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Share this Article