காரைநகரில் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, காரைநகர் பிரதேச சபை ஏற்பாடு செய்த நிலையங்களுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி நாளை(ஒக்ரோபர் 22) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு,காரைநகர் களபூமி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சித் திணைக்களத்தின் சனசமூக அமைப்புக்களை வலுப்படுத்துவதுடன், இளையவர்களுக்கிடையில் புரிந்துணர்வை அதிகரித்தல் எனும் நோக்குடன் நடாத்தப்படவுள்ள குறித்த மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் காரைநகர் பிரதேசத்திலுள்ள 12 சன சமூக நிலையங்களின் அணிகள் பங்குபற்றவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article