பிரதேச ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற நாரந்தனை பங்கு இளைஞர் கழகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவு இளைஞர் சம்மேளனத்தினால் கடந்த புதன்கிழமை நடாத்தப்பட்ட போட்டிகளில் நாரந்தனை பங்கு இளைஞர் கழகம் பிரதேச ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

கபடி போட்டியில் ஆண்கள் அணி முதல் இடத்தினையும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும், கரப்பத்தாட்டப் போட்டியில் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும், கயிறிழுத்தல் போட்டியில் ஆண்கள் அணி முதலாம் இடத்தையும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

வலைப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டதுடன் தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட ஏனைய போட்டிகளிலும் திறமைகளை வெளிக்காட்டி பல வெற்றிக் கேடயங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article