வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் (ஒக்ரோபர் 19) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலுள்ள பயணிகள் இருக்கை ஒன்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மீட்கப்பட்ட சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் உயிரிழந்த நபரை அடையாளம் காண்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article