கிளிநொச்சியில் இடம்பெற்ற பசுபதிப்பிள்ளையின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்குமாகாண சபையின் மேனாள் உறுப்பினர் அமரர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (ஒக்ரோபர் 14) காலை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நினைவு வணக்க நிகழ்வில், சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தனின் நினைவுப்பேருரை இடம்பெற்றிருந்ததோடு, வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்குமாகாண மேனாள் உறுப்பினர் பசுபதி அரியரத்தினம், கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருனாசலம் வேழமாலிகிதன், ஓய்வுநிலை கிராம அலுவலர் பரமதாஸ், அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் உள்ளிட்டோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

அமரர் பசுபதிப்பிள்ளை அவர்களின் குடும்பத்தினர், மதகுருமார், உறவினர்கள், கட்சிப் பிரமுகர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பெருவிழாவில் வைத்து வழங்கப்பட்ட ஆன்மீகத்துறைக்கான கதிரவேலு அப்புச்சி ஞாபகார்த்த விருது அவரது குடும்பத்தினரிடம் இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article