எழுவைதீவு முருகவேள் வித்யாலயத்தில் ஆசிரியர் தின விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு முருகவேள் வித்யாலயத்தில் ஆசிரியர் தின விழா அண்மையில் பெற்றோர், மாணவர்களின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

ஆசிரியர்கள் வைபவரீதியாக மாணவர்களால் மலர் மாலைகள் அணிவித்து பான்ட் வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மங்கல ஒளியேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாணவர்களின் கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் வாழ்த்துரைகள் என்பவற்றுடன் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்புடத்தக்கது.

Share this Article