காரைநகரில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தரம் ஐந்து மாணவர்களுக்கு எழுத்துப்பரீட்சை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் வடக்கு நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தரம் ஐந்து மாணவர்களுக்கு எழுத்துப்பரீட்சை இன்று (ஒக்ரோபர் 9) காரைநகர் யாழ்ரன் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது.

“உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது” என்னும் எண்ணக்கருவிற்கு அமைய வாசிப்பு மாத நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் காரைநகர் வடக்கு நூலகத்தின் ஏற்பாட்டில் தரம் ஐந்து மாணவர்களுக்கான பரீட்சை இடம்பெற்றது.

இச் செயற்பாடு மாணவர் மத்தியில் வாசிப்பின் முக்கியத்துவத்தினை எடுத்தியம்புவனவாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article