சிறப்புற இடம்பெற்ற அனலைதீவு அன்னை வேளாங்கன்னி ஆலயத் திருவிழா திருப்பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அனலைதீவு அன்னை வேளாங்கன்னி ஆலயத்திருவிழா திருப்பலி எழுவைதீவு ,அனலைதீவு பங்குத்தந்தை யூட் கெமில்டன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில்
இன்று(ஒக்ரோபர் 8) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

வன்னி கிளிநொச்சி கீயூடெக் இயக்குனர் அருட்பணி ஜெபஜீபன் மற்றும் கிளிநொச்சி ஆரோபனசிறுவர் இல்ல இயக்குனர் அருட்பணி சசிகரன் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை குருக்களின் பங்குபற்றலுடனும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

எழுவைதீவிலிருந்து தனிப்படகு ஒழுங்குபடுத்தப்பட்டு அதிகளவான மக்கள் பங்குபற்றியதுடன் அனலைதீவு , மெலிஞ்சிமுனை பங்கு மக்கள் மற்றும் அனலைதீவு இந்துக்களின் அதிக பங்களிப்புடன் அன்னை வேளாங்கன்னி ஆலயத்திருவிழா இடம்பெற்றதுடன் அன்னையின் திருச்சொரூப பவனி, ஆசீர்வாதம் என்பன சிறப்புற நடைபெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருவிழா திருப்பலிக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து சேவையும் விசேடமாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article