காரைநகரில் ஆபத்தான இடங்களை எச்சரிக்கும் பதாதைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காரைநகர் பிரதேசத்தில் சிறுவர் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தான இடங்களை அடையாளம் கண்டு எச்சரிக்கை பதாதை பொருத்தும் செயற்பாடு காரைநகர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று(ஒக்ரோபர் 3) பூசணிக்குளம், பெரியடைப்பு குளம் ஆகிய பகுதியில் எச்சரிக்கை பதாதை பொருத்தப்பட்டது.

குறித்த பகுதி பொதுமக்கள் போக்குவரத்துப் பகுதியாக இருப்பதனால் பருவ மழையின் போது நீர் தேங்குவதன் மூலம் இவ் பகுதியின் ஊடாக பயணிக்கும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தான பிரதேசமாக இருக்கின்றதை காரைநகர் பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டதுடன் அபாய வலய எச்சரிக்கை பதாதை பொருத்துவதன் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெருவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் சிறுவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இப் பிரதேசங்கள் அபாய வலயமாக பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article