நாரந்தனை உதைப்பந்தாட்டப் போட்டியில் புங்குடுதீவு சண்ணிஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

61 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தீவக லீக்கின் அனுமதியுடன் நாரந்தனை அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா விளையாட்டு கழகம் இணைந்து நடாத்திய உதைப்பந்தாட்டப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகம் மைதானத்தில் நேற்று (செப்ரெம்பர் 30) மாலை இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகம் எதிர் புங்குடுதீவு சண்ணிஸ்ரார் விளையாட்டுக் கழகம் மோதிக்கொண்டது ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தமையால் வெற்றி இலக்கு தண்டனை உதை மூலம் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது 5 இற்கு 6 எனும் கோல் கணக்கில் புங்குடுதீவு சண்ணிஸ்ரார் விளையாட்டுக் கழகம் 2023 இற்கான சம்பியனை தனதாக்கிக்கொண்டது.

Share this Article