நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தை நோக்கி படையெடுத்த பெருமளவு மக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கையில் நேற்றுமுன்தினம் மற்றுமநேற்று ஆகிய இரு தினங்கள்(வியாழன் 28, மற்றும் வெள்ளி 29) விடுமுறை தினங்கள் என்பதாலும், அதனுடன் இணைந்து வார இறுதி நாள்கள் என்பதாலும் நீண்ட விடுமுறை காணப்படுகின்றது.

இந்தநிலையில், இந்த நீண்ட விடுமுறை நாட்களில் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தின் நயினாதீவு விகாரைக்கும், நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கும் நேற்று மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படடுகின்றது.

இந்த நிலையில் நயினாதீவு நோக்கிப் பயணிக்கும் மக்கள் குறிகட்டுவானில் பேருந்துகளை நிறுத்திவிட்டு படகு சேவைக்காக நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சில படகுகள் நேற்று படகு சேவையை மேற்கொண்டாலும் பயணிகளை ஏற்றி இறக்குவதில் பெரும் தாமதமான நிலை காணப்பட்டது.

அதிகபடியான மக்கள் யாழ்ப்பாணம் நயினாதீவு நாக விகாரை, நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கு பயணம் மேற்கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

குறிப்பாக தமிழ் – சிங்கள மக்கள் நேற்றைய பௌர்ணமி நாளில் அம்மனுக்கும் நாகவிகாரைக்கும் வழிபாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article