கிளிநொச்சி பஸ் நிலைய வளாகத்தில் குத்தகை அடிப்படையில் கடைத் தொகுதிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி பேரூந்து நிலைய வளாகத்தில் விற்பனை நிலையங்கள் அமைத்து சுயதொழில் செய்ய விண்ணப்பம் செய்த சுமார் இருபது பயனாளர்களுக்கு ஐந்து வருட குத்தகை அடிப்படையில் கடைத் தொகுதிகள் வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை நீண்டகாலமாக புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்ட காலத்திலிருந்து விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(செப்ரெம்பர் 26) அதற்கு தீர்வு கானப்பட்டுள்ளது .

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் கரைச்சி பிரதேச சபை செயலாளர். கடைதொகுதி பயனாளிகள் கலந்திருந்தனர் .

Share this Article