முல்லைத்தீவு நிக்கவெவ இடது கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்ட வெலிஓயா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ இடது கிராமத்தில் வசிக்கும் மக்களிற்கு நேற்று (செப்ரம்பர் 19) பிற்பகல் 2.30 மணியளவில் உலர் உணவுப்பொருட்கள் உலக உணவுத் திட்டத்தினரால் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர். திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர், உலக உணவுத்திட்டத்தின் உயரதிகாரிகள் ஆகியோர் நிக்கவெவ இடது கிராமத்திற்கு நேரில் சென்று தெரிவுசெய்யப்பட்ட 199 பயனாளிகளிற்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கிவைத்தனர்.

இந் நிகழ்வில் மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. க.ஜெயபவானி, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.M.முபாரக், வெலிஓயா உதவிப் பிரதேச செயலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமசேவகர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article