தீவகத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அசௌகரியம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ் முற்றவெளிப் பகுதிக்கு அண்மையாக உள்ள தீவகத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி ஊடாக பயணிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது கடந்த பல வருடங்களாக தொடர்கதையாக தொடர்ந்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகம் நோக்கிப் பயணிக்கின்ற பாதையிலேயே மழை நீர் தேங்கி நிற்கின்ற நிலைமை மழைகாலங்களில் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.

இப்பாதையின் ஊடாக தீவகம், பண்ணைக் கடற்கரை , கொட்டடி சந்தை மற்றும் அரச அலுவலகங்கள் செல்கின்ற மக்கள் அந்த பாதை ஊடாக மழைநீர்தேக்கத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனவே இதற்கான வடிகாலமைப்பு வசதியினை சீராக ஒழுங்கமைத்து அப்பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கையினை உரியவர்கள் மேற்கொண்டு சீரான போக்குவரத்திற்கு வழிசமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article