மே மாத இறுதி வரை காலக்கெடு – ஜனாதிபதி உத்தரவு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள 500 குடும்பங்களுக்கான தற்காலிகக் குடியிருப்பு வசதிகளை மே மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது மூன்று மாவட்டங்களை மையப்படுத்தி சுமார் 20 பிரதான தற்காலிக முகாம்கள் செயற்பட்டு வருகின்றன. டித்வா சூறாவளி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த சுமார் 500 குடும்பங்கள் தற்போது இந்த முகாம்களில் தங்கியுள்ளனர்.

முகாம்களில் உள்ள மக்களின் அன்றாடச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான தற்காலிகக் குடியிருப்பு வசதிகளை மே மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்காக மே மாத இறுதிக்குள் தற்காலிக வீடுகளைக் கட்டி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment