மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய அதிபருக்கு சிறை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பதின்ம வயது மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் தீர்ப்பளித்தார்.

கடந்த 2014 செப்ரெம்பர் மாதம் 23 ஆம் திகதி மன்னார் பாடசாலையில் கற்ற 10 வயது மாணவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவன் கல்வி கற்ற பாடசாலை அதிபர் கைது செய்யப்பட் டிருந்தார்.

இந்த நிலையில், “குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு. 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும். வழங்கத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று நீதிவான் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்ததுள்ளார்.

Share this Article