கசூரினா கடற்கரைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த நகர அபிவிருத்தி அதிகார சபையினர்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காரைநகர் கசூரினா சுற்றுலா மையத்தை நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பிலான ஆராய்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலான சாத்திய வள ஆய்வினை மேற்கொள்ளும் முகமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செப்ரெம்பர் 4) கசூரினா கடற்கரைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு காரைநகர் பிரதேசசபையினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக் கலந்துரையாடலில் சபையின் சார்பில் செயலாளர், சபையின் திட்ட அமுலாக்க குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபைப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும், மாகாண சுற்றுலா பணியக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

இக் கலந்துரையாடலில் கசூரினா கடற்கரையில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கோரிக்கையினை உடன் சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையினர் கோரியுள்ளனர்.

Share this Article