வேலணை மத்திய கல்லூரியில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வடக்கு மாகாண புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி சமன் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் போதைப் பொருள் பாவனையை தடுத்தல் மற்றும் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (ஓகஸ்ட் 31) தரம் 10 முதல் 13 வரையான மாணவர்களுக்கு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது புனர்வாழ்வு நிலைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், பிரதான வளவாளராக அருட் தந்தை நிர்மல் அடிகளார் கலந்துகொண்டார்.

தற்கால சவால்கள் நிறைந்த சூழலில் மாணவர்களின் நலன்கருதி இவ் விழிப்புணர்வு செயற்பாட்டை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article