மன்னார் துப்பாக்கிச் சூட்டுக் கொலைக்கான காரணம் வெளியானது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று (ஓகஸ்ட் 24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும்  உயிரிழந்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய முறுகல் காரணமாகவே மன்னார் – முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரும், மாந்தை மேற்கு – சன்னார் கிராமத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவருமே கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share this Article