வேலணையில் சிறப்புற்ற பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா நிகழ்வு நேற்று(ஓகஸ்ட் 18) பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் ஆசியுரை வழங்கியிருந்தனர்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகம் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து குறித்த நடத்திய பண்பாட்டு பேருவிழா நிகழ்வில் வேலணை பிரதேசத்தை சேர்ந்த 13 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டனர்.

Share this Article