விவசாய வீரர் தின வீதி ஓட்டம் பெரியதம்பனையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

விவசாய வீரர் தினத்தை முன்னிட்டு பெரியதம்பனை வீதி ஓட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பெரியபண்டிவிரிச்சான் பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பமாகி பெரியதம்பனை பிள்ளையார் கோவில் வளாகத்தில் முடிவடையவுள்ளது.

பதினாறு வயதுக்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இருபாலருக்கும் 10.5 கிலோ மீற்றர் மரதன் ஓட்டம் தனித் தனியாக இடம்றெவுள்ளது.ஆண், பெண் வீரர்கள் தனித் தனி வெற்றியாளராகக் கணக்கிடப்படுவர்.

வீதி ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு ஓடி முடிக்கும் வீர, வீராங்கனைகளுக்கு நற்சான்றிதழும். முதல் 12 வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. இந்தப் போட்டிக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆண், பெண் வீரர்கள் தனித் தனிவெற்றியாவராகக் கணக்கிடப்படுவர், பங்குபற்ற விரும்பும் வீர வீராங்கணைகள் கட்டுப்பணமாக 50 ரூபா செலுத்தி உதயதாரகை பொருளாளரிடம் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
பொருளாளர்,
உதயதாரகை விளையாட்டுக்கழகம்
தொ.பே: 077 0736583

 

Share this Article