திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் சூழலை அழகுபடுத்த நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் சூழலை அழகுபடுத்தலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இன்று (ஜூலை 28) மு.ப 11.00 மணிக்கு திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் கள விஜயத்தினை மேற்கொண்டார்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர், வர்த்தக சங்கத்தினர், கலாசார உத்தியோகத்தர்கள்,  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதலானோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு நிறைவடையாத சூழ்நிலையில் வழக்கினை எந்தவகையிலும் மீறாத வகையிலும் பாதிக்காத வகையிலும் ஆலய சூழலை அழகுபடுத்தலும் மேம்படுத்தலும் என்ற நோக்கிலே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி ), மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜெயபவாணி, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி, மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article