வவுனியாவில் கெரோயினுடன் இளைஞர்கள் இருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா இரு வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது கெரோயினுடன் இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது கூமாங்குளம் பகுதியில் 5 கிராம் 140 மில்லிகிராம் கெரோயினுடன் இளைஞர் ஒருவரையும் வேப்பங்குளம் பகுதியில் 5 கிராம் 100 மில்லிகிராம் கெரோயினுடன் இளைஞர் ஒருவரும் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையுடன் கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட கெரோயினையும் வவுனியா மேல் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share this Article