முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிக்கூழ் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாடான ஆடிக்கூழ் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக்கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் நேற்று (ஜூலை 17) மு.ப 11.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து ஆடிக்கூழ் குடித்து மகிழ்ந்தனர்.

மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் முழுமையான ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.லிங்ஙேஸ்வரன், சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article