காரைநகர் ஆலங்கண்டு இந்து மயானத்தில் அபிவிருத்தி செயற்பாடு முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காரைநகர் பிரதேச சபையின் தொலைநோக்கு எண்ணக்கருவிற்கு அமைய காரைநகர் மயானங்களை அபிவிருத்தி செய்யும் முகமாக முன்மாதிரியான மயானச் செயற்பாடாக ஆலங்கண்டு இந்து மயானத்தை அபிவிருத்தி செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மயானத்தை சுத்தம் செய்து அழகுபடுத்தும் முகமாக நேற்று(ஜூலை 11) சபையின் பெக்கோ ( JCB ) வாகனம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, பெயர்பலகை பொருத்தியதுடன் மயானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாயிற் கதவு பூட்டப்பட்டுள்ளது.

மேலும் மயான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கையான கழிவுத்தொட்டி அமைத்தல், பூச்சாடிகள் அமைத்தல், மின்னிணைப்பு ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே துரித கதியில் மயான அபிவிருத்திச் சபை புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Share this Article