எழுவைதீவு மின்வெட்டு தொடர்பில் மக்கள் விசனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு பிரதேசத்தில் இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு மேற்கொள்வது தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையை விரைவாக சீர்செய்ய மக்கள் ஒன்றினைந்து ஆராய்ந்து முடிவு காண வேண்டும் என்று இன்றைய ஞாயிறு திருப்பலியில் பங்குமக்களிடம் பங்குதந்தை அருட்பணி அலின் கருணாகரன் கேட்டு கொண்டார்.

இது தொடர்பாக ஆராயுமாறும் சமூக அக்கறையுள்ள பங்குத்தந்தை கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

எனவே விரைவாக தீர்வு வழங்க வினையமாக மக்கள் கேட்டு நிற்கின்றனர். எழுவைதீவில் மட்டும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்சாரம் நிறுத்தப்படுகின்றமை கேள்விக்குரியதொன்றாக மக்கள் கவலை வெளியாட்டுள்ளனர்.

Share this Article