கடமைகளை பொறுப்பேற்றார் முல்லைத்தீவு மாவட்டச் செயலர்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடத்துக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ. உமா மகேஸ்வரன் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (ஜூலை 9) ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வுபெற்றுள்ள நிலையில், பதில் மாவட்ட செயலாளராக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த அ. உமாமகேஸ்வரன் கடந்த வாரம் அமைச்சரவையால் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Share this Article